/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ஜவுளி, சாய ஆலை நிர்வாகிகள் தேர்தல் அறிக்கை குழுவிடம் மனுஜவுளி, சாய ஆலை நிர்வாகிகள் தேர்தல் அறிக்கை குழுவிடம் மனு
ஜவுளி, சாய ஆலை நிர்வாகிகள் தேர்தல் அறிக்கை குழுவிடம் மனு
ஜவுளி, சாய ஆலை நிர்வாகிகள் தேர்தல் அறிக்கை குழுவிடம் மனு
ஜவுளி, சாய ஆலை நிர்வாகிகள் தேர்தல் அறிக்கை குழுவிடம் மனு
ADDED : பிப் 12, 2024 11:19 AM
குமாரபாளையம்: தி.மு.க., தேர்தல் அறிக்கை குழுவினர், எம்.பி., கனிமொழி தலைமையில் சேலம் வந்தனர். இதில், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலர் மதுரா செந்தில், குமாரபாளையம் தெற்கு நகர தி.மு.க., செயலர் ஞானசேகரன் தலைமையில், குமாரபாளையம் டையிங் உரிமையாளர்கள் சங்கம், குமாரபாளையம் கொங்கு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம், குமாரபாளையம் பவர்லும் சங்கம் சார்பில், தேர்தல் அறிக்கை குழுவினர் வசம் மனு கொடுக்கப்பட்டது.
இதில், சாயப்பட்டறை தொழில் தொடர்ந்து நடத்த, பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். அதிகளவில் பருத்தி ஏற்றுமதி செய்வதால், நுால் விலை அடிக்கடி அதிகரிக்கிறது.
இதனால், ஜவுளி உற்பத்தி தொழில் பாதிப்பதால், இதனை தவிர்க்க பருத்தி ஏற்றுமதியை தவிர்க்க வேண்டும். ஜவுளிக்கான ஆர்டர்கள் பங்களாதேஷ், சீனாவிற்கு செல்கிறது. இந்தியாவிற்கு கிடைப்பது இல்லை. இதனால் இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகளுக்கு ஆர்டர் கிடைக்காததால், ஜவுளி ஏற்றுமதி செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
எனவே, இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகளுக்கு வெளிநாட்டு ஆர்டர்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.