/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ஆகாயத்தாமரை அகற்ற நகராட்சி கமிஷனரிடம் மனுஆகாயத்தாமரை அகற்ற நகராட்சி கமிஷனரிடம் மனு
ஆகாயத்தாமரை அகற்ற நகராட்சி கமிஷனரிடம் மனு
ஆகாயத்தாமரை அகற்ற நகராட்சி கமிஷனரிடம் மனு
ஆகாயத்தாமரை அகற்ற நகராட்சி கமிஷனரிடம் மனு
ADDED : ஜூலை 10, 2024 07:22 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பகுதி காவிரியாற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற கோரி, 4வது வார்டு கவுன்சிலர் செந்தில், நகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தார்.அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: பள்ளிப்பாளையம் பகுதி காவிரி ஆற்றோரத்தில் பாவடித்தெரு, சத்யா நகர், நாட்டாகவுண்டம்புதுார் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளால், ஆற்றோர குடியிருப்புகளில் விஷ ஜந்துக்கள் புகுந்து விடுகின்றன. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகள், ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். எனவே, மக்களின் பாதுகாப்பு கருதி, நகராட்சி சார்பில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.