/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/'பஸ் ஸ்டாண்டை மாற்றும் திட்டத்தை கைவிட்டு சாலை விரிவாக்கம் செய்யணும்''பஸ் ஸ்டாண்டை மாற்றும் திட்டத்தை கைவிட்டு சாலை விரிவாக்கம் செய்யணும்'
'பஸ் ஸ்டாண்டை மாற்றும் திட்டத்தை கைவிட்டு சாலை விரிவாக்கம் செய்யணும்'
'பஸ் ஸ்டாண்டை மாற்றும் திட்டத்தை கைவிட்டு சாலை விரிவாக்கம் செய்யணும்'
'பஸ் ஸ்டாண்டை மாற்றும் திட்டத்தை கைவிட்டு சாலை விரிவாக்கம் செய்யணும்'
ADDED : ஜூலை 10, 2024 07:23 AM
நாமக்கல்: 'பஸ் ஸ்டாண்டை மாற்றும் திட்டத்தை கைவிட்டு, சாலை விரிவாக்கம் செய்யும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்' என, ராசிபுரம் நகர, அ.தி.மு.க., செயலாளர் பாலசுப்ரமணியம் தலைமையில், பல்வேறு அமைப்பினர், கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ராசிபுரம் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில், நகர பஸ் ஸ்டாண்டை இடமாற்றம் செய்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், நகர பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம் சம்பந்தமாக கூறப்பட்டுள்ளதே தவிர, எந்த இடத்திற்கு மாற்றப்படுகிறது, நகராட்சி இடமா? அரசு நிலமா? அல்லது இடம் வாங்கப்பட்டுள்ளதா? என்ற விபரம் தெரிவிக்கவில்லை.
மேலும், கடந்த, 5ல் கூட்டணி கட்சிகளுக்கு தகவல் தெரிவிக்காமல், சில பொதுநல அமைப்புகளை வைத்து கருத்து கேட்புகூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இது, ராசிபுரம் மக்களின் நலனுக்கு எதிரானது. ராசிபுரம் நகரத்தில் வசிக்கும் மக்கள் தொகை, 75,000 பேர். அவர்களில், வாக்காளர்களின் எண்ணிக்கை, 38,000. ஏற்கனவே இருந்த போக்குவரத்து நெரிசல், புறவழிச்சாலை அமைத்ததாலும், கல்லுாரி வாகனங்கள், லாரிகள் போன்றவை புறவழிச்சாலை வழியாக செல்வதாலும், பெரும்பாலும் நெரிசல் குறைந்துள்ளது. ராசிபுரம் நகராட்சி திருமண மண்டபம் சாலையில் இருந்து, கோனேரிப்பட்டி மாரியம்மன் கோவில் வரை சாலை விரிவாக்கம் சம்பந்தமாக கடந்த, ஆட்சியில் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த திட்டத்தை பரிசீலனை செய்து நிறைவேற்றியும், புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் இருந்து தட்டாங்குட்டை சாலை வழியாக அணைப்பாளையம் புறவழிச்சாலை வரை சாலை விரிவாக்கம் செய்தாலே முற்றிலும் போக்குவரத்து நெரிசல் இல்லாத நகராகமாக மாறிவிடும். அதனால், பஸ் ஸ்டாண்ட் மாற்றும் திட்டத்தை கைவிட்டு, சாலை விரிவாக்கம் செய்யும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். நகர வளர்ச்சி என்ற பெயரில் ராசிபுரம் நகரத்தை வீழ்ச்சியடைய செய்யும் இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.