/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கூடுதல் வகுப்பறை கேட்டு ஈரோடு எம்.பி.,யிடம் மனு கூடுதல் வகுப்பறை கேட்டு ஈரோடு எம்.பி.,யிடம் மனு
கூடுதல் வகுப்பறை கேட்டு ஈரோடு எம்.பி.,யிடம் மனு
கூடுதல் வகுப்பறை கேட்டு ஈரோடு எம்.பி.,யிடம் மனு
கூடுதல் வகுப்பறை கேட்டு ஈரோடு எம்.பி.,யிடம் மனு
ADDED : செப் 13, 2025 01:40 AM
குமாரபாளையம், குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளியில், அதிக மாணவியர் சேர்ந்ததால் வகுப்பறை பற்றாக்குறை ஏற்பட்டது.
இதனால், கூடுதல் வகுப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, தலைமை ஆசிரியை காந்தரூபி தலைமையில், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி உமா மகேஸ்வரி, துணை தலைவி சாந்தி, குமாரபாளையம் நகர தெற்கு பொறுப்பாளர் ஞானசேகரன் உள்ளிட்டோர், ஈரோடு எம்.பி.,யிடம் மனு கொடுத்தனர்.அந்த மனுவில், 'குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், கடந்தாண்டு பயின்ற மாணவியர் எண்ணிக்கை, 1,376 பேர். இந்தாண்டு கல்வி பயிலும் மாணவியரின் எண்ணிக்கை, 1,676 பேர். இந்தாண்டு கூடுதலாக, 300 மாணவியர் சேர்ந்துள்ளனர்.
இதனால் கூடுதலாக, 10 வகுப்பறை, 2 கழிப்பறை, 2 ஆய்வகம் மற்றும் கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் பாடங்களுக்கு கூடுதலாக ஒரு முதுநிலை ஆசிரியர் தேவை உள்ளது. மேற்கண்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தர வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.