/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மகளிர் மேல்நிலைப்பள்ளி முன் பஸ் ஸ்டாப்: வேண்டுகோள் ஏற்பு மகளிர் மேல்நிலைப்பள்ளி முன் பஸ் ஸ்டாப்: வேண்டுகோள் ஏற்பு
மகளிர் மேல்நிலைப்பள்ளி முன் பஸ் ஸ்டாப்: வேண்டுகோள் ஏற்பு
மகளிர் மேல்நிலைப்பள்ளி முன் பஸ் ஸ்டாப்: வேண்டுகோள் ஏற்பு
மகளிர் மேல்நிலைப்பள்ளி முன் பஸ் ஸ்டாப்: வேண்டுகோள் ஏற்பு
ADDED : செப் 13, 2025 01:41 AM
ப.வேலுார், ப.வேலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பள்ளி சாலையில் உள்ளது. சற்று துாரத்தில் மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. தினமும் காலை, 8:00 மணிக்கு அரசு டவுன் பஸ், 'வி1' மோகனுாரில் இருந்து புறப்பட்டு, ப.வேலுார் வழியாக கபிலர்மலை செல்கிறது. பள்ளி வேலை நாட்களில் ஓலப்பாளையம், குப்பிச்சிபாளையம், பொய்யேரி பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியர், 70க்கும் மேற்பட்டோர் இந்த பஸ்சில், ப.வேலுார் பள்ளி சாலையில் உள்ள அரசு பள்ளிக்கு வருகின்றனர்.
காலை, 9:00 மணிக்கு அரசு டவுன் பஸ், 'வி1' ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாசலில் நிறுத்தி, மாணவ, மாணவியரை இறக்கிவிட்டு, மீண்டும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக செல்கிறது. பின், சிறிது துாரத்தில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு, 30க்கும் மேற்பட்ட மாணவியர், 10 நிமிடம் நடந்து செல்கின்றனர்.
இதனால், ஆண்கள் பள்ளி முன் பஸ் நிறுத்தி செல்வதுபோல், மகளிர் பள்ளி முன் நிறுத்தி சென்றால் மாணவியருக்கு பாதுகாப்பாகவும், உதவியாகவும் இருக்கும் என, பெற்றோர் வேண்டுகோள் விடுத்தனர். இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், மகளிர் மேல்நிலைப்பள்ளி முன், 'வி1' பஸ் நிறுத்தப்பட்டு, மாணவியரை இறக்கிவிட்டு செல்கிறது. இதனால் மாணவியர், பெற்றோர் மகிழ்ச்சியடைந்தனர்.