/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/'மக்களுடன் முதல்வர்' திட்டம் கடைகோடியில் உள்ளவர்களுக்கும் தெரியப்படுத்தணும்: எம்.பி.,'மக்களுடன் முதல்வர்' திட்டம் கடைகோடியில் உள்ளவர்களுக்கும் தெரியப்படுத்தணும்: எம்.பி.,
'மக்களுடன் முதல்வர்' திட்டம் கடைகோடியில் உள்ளவர்களுக்கும் தெரியப்படுத்தணும்: எம்.பி.,
'மக்களுடன் முதல்வர்' திட்டம் கடைகோடியில் உள்ளவர்களுக்கும் தெரியப்படுத்தணும்: எம்.பி.,
'மக்களுடன் முதல்வர்' திட்டம் கடைகோடியில் உள்ளவர்களுக்கும் தெரியப்படுத்தணும்: எம்.பி.,
ADDED : ஜூலை 10, 2024 07:02 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், அணியார் பஞ்., எருமப்பட்டி ஒன்றியம், பவித்திரம் பஞ்., ராசிபுரம் ஒன்றியம், போடிநாய்க்கன்பட்டி பஞ்., ஆகிய இடங்களில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட சிறப்பு முகாம், இரண்டாம் கட்டமாக நடக்க உள்ள இடங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.பி., ராஜேஸ்குமார் பேசியதாவது:நாமக்கல் மாவட்டத்தில், நகராட்சி, டவுன் பஞ்., பகுதிகளில், 'மக்களுடன் முதல்வர்' திட்டம் 2023 டிச.,ல், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம், குமாரபாளையம் ஆகிய, 5 நகராட்சிகள், 18 டவுன் பஞ்.,கள் என, மொத்தம், 39 இடங்களில் முகாம் நடத்தப்பட்டது. அதில் பெறப்பட்ட மனுக்கள் மீது, 30 நாளில் தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. அதன்மூலம், மாநில அளவில், நாமக்கல் மாவட்டம் சிறந்த மாவட்டமாக செயல்பட்டு, தமிழக முதல்வரின் வாழ்த்துக்களை பெற்றுள்ளது.'மக்களுடன் முதல்வர்' திட்டம், இரண்டாம் கட்டமாக, மாவட்டத்தில் நாளை முதல் ஆக., 27 வரை, 15 ஒன்றியங்களுக்குட்பட்ட, 322 கிராம பஞ்.,களில், 69 இடங்களில் நடக்கிறது. இதுகுறித்து, கடைகோடியில் உள்ள கிராமப்புற மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, விழிப்புணர்வு பிரசார வாகனங்களை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், தனித்துணை கலெக்டர் பிரபாகரன், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.