/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பள்ளிப்பாளையம் பகுதியில் வேகமெடுத்த மேம்பால பணிபள்ளிப்பாளையம் பகுதியில் வேகமெடுத்த மேம்பால பணி
பள்ளிப்பாளையம் பகுதியில் வேகமெடுத்த மேம்பால பணி
பள்ளிப்பாளையம் பகுதியில் வேகமெடுத்த மேம்பால பணி
பள்ளிப்பாளையம் பகுதியில் வேகமெடுத்த மேம்பால பணி
ADDED : ஜூலை 10, 2024 06:58 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பகுதி யில் தொய்வு நிலையில் காணப்பட்ட மேம்பால பணி, தற்போது வேகமெடுத்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.பள்ளிப்பாளையம் அருகே, ஆலாம்பாளையம் பகுதியில் இருந்து பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பாலம் சாலை வரை, 3 கி.மீ., துாரத்திற்கு, ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன், 320.71 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சென்னை - கன்னியாகுமரி தொழிற்தடத்திட்டம் மூலமாக, நான்கு வழிச்சாலையாக மேம்பாடு செய்தல் மற்றும் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த, இரண்டு ஆண்டாக நடந்து வருகிறது.
90 சதவீத பணிகள் முடிந்த நிலையில், பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மட்டும், 10 சதவீத பணிகள், கடந்த, 4 மாதமாக மிகவும் தொய்வு நிலையில் நடந்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பொது மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். தினமும், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சில சமயம், மூன்று, நான்கு மணி நேரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.கடந்த, 3ல் மாவட்ட கலெக்டர் உமா, பள்ளிப்பாளையம் பகுதியில் நடந்து வரும் மேம்பால பணியை ஆய்வு செய்தார். பின், பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின், தற்போது மேம்பாலம், சாலை விரிவாக்க பணிகள் வேகமெடுத்து விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.