/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பரமத்தி டவுன் பஞ்.,ல் தெரு நாய்கள் பிடிப்பு பரமத்தி டவுன் பஞ்.,ல் தெரு நாய்கள் பிடிப்பு
பரமத்தி டவுன் பஞ்.,ல் தெரு நாய்கள் பிடிப்பு
பரமத்தி டவுன் பஞ்.,ல் தெரு நாய்கள் பிடிப்பு
பரமத்தி டவுன் பஞ்.,ல் தெரு நாய்கள் பிடிப்பு
ADDED : செப் 03, 2025 02:17 AM
ப.வேலுார், பரமத்தி டவுன் பஞ்சாயத்தில் உள்ள, 15 வார்டுகளின் குடியிருப்பு பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன.
இதில் சில வெறி பிடித்த நாய்கள், தெருவில் செல்வோரை துரத்தி கடிக்கின்றன. இதனால், டியூசன் முடிந்து செல்லும் மாணவர்கள், தெருவில் விளையாடும் குழந்தைகளை அச்சத்துக்குள்ளாகின்றனர். டூவீலரில் செல்வோரை விரட்டி செல்லும்போது, அவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். இதனால் நாய்களை கட்டுப்படுத்த டவுன் பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து, பரமத்தி டவுன் பஞ்., செயல் அலுவலர் ராஜசேகரன் உத்தரவுப்படி டவுன் பஞ்., பணியாளர்கள், பரமத்தி பகுதிகளில் சுற்றித்திரிந்த, 52 தெருநாய்களை பிடித்து, நாமக்கல் மாநகரத்தில் உள்ள நாய்கள் இன கட்டுப்பாடு மையத்திற்கு, நேற்று கொண்டு சென்றனர். அங்கு இன கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மற்றும் வெறிநாய் தடுப்பூசி போடப்படும் என, டவுன் பஞ்., நிர்வாகம் தெரிவித்தது.