Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/தொய்வு நிலையில் விசைத்தறி தொழில் ப.பாளையம் உற்பத்தியாளர்கள் கவலை

தொய்வு நிலையில் விசைத்தறி தொழில் ப.பாளையம் உற்பத்தியாளர்கள் கவலை

தொய்வு நிலையில் விசைத்தறி தொழில் ப.பாளையம் உற்பத்தியாளர்கள் கவலை

தொய்வு நிலையில் விசைத்தறி தொழில் ப.பாளையம் உற்பத்தியாளர்கள் கவலை

ADDED : ஜூன் 16, 2024 06:40 AM


Google News
பள்ளிப்பாளையம் : பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் விசைத்தறி தொழில் தொடர்ந்து தொய்வு நிலையில் உள்ளதால், உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் முக்கிய தொழிலாக விசைத்தறி தொழில் உள்ளது. விசைத்தறியில் லுங்கி, சட்டை, வேட்டி, துண்டு, சேலை உள்ளிட்ட பல வகையான துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பள்ளிப்பாளையம் பகுதி விசைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் துணிகள், இந்தியா முழுதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த, இரண்டு ஆண்டாக உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையாகி வந்தன. இதனால், விற்பனை அடிப்படையில் உற்பத்தி நடந்தது. கடந்த மார்ச் மாதம் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், தேர்தல் நடைமுறையால் உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் தேக்கமடைந்ததால், விசைத்தறி தொழில் தொய்வு நிலையில் காணப்பட்டது.

தேர்தல் முடிந்தவுடன் ஓரிரு வாரங்கள் மட்டும் விற்பனை இருந்தது. ஆனால், மீண்டும் தொய்வு நிலையில் காணப்பட்டது. உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் விற்பனை இல்லாமல் தேக்கம் அடைந்துள்ளதால், உற்பத்தியும் குறைந்து விட்டது. தேர்தல் முடிவுக்கு பின், மீண்டும் விற்பனை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தோம்.

ஆனால், தற்போது உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் பெருமளவில் தேக்கமடைந்து விட்டதால், தொடர்ந்து உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலையில் தொழில் காணப்பட்டதால், விசைத்தறி கூடத்திற்கு விடுமுறை அளிக்கவும் வாய்ப்புள்ளது என, நேரு நகரை சேர்ந்த உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us