Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கொலைக்கான கூலியை பிரிக்கும் போது ஏற்பட்ட தகராறில் சிக்கிய கூலிப்படை

கொலைக்கான கூலியை பிரிக்கும் போது ஏற்பட்ட தகராறில் சிக்கிய கூலிப்படை

கொலைக்கான கூலியை பிரிக்கும் போது ஏற்பட்ட தகராறில் சிக்கிய கூலிப்படை

கொலைக்கான கூலியை பிரிக்கும் போது ஏற்பட்ட தகராறில் சிக்கிய கூலிப்படை

ADDED : ஜூன் 16, 2024 06:40 AM


Google News
மல்லசமுத்திரம் : மல்லசமுத்திரம் அருகே, பாலமேடு கிராமத்தை சேர்ந்தவர் செல்வம், 54; தனியார் பஸ் டிரைவர். இவரை, சொத்திற்காக அவரது மகனும், மருமகனும் கூலிப்படையை வைத்து கொலை செய்தனர். இதையடுத்து, மகன், மருமகன் உள்பட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். இதில் கொலையாளிகள், போலீசில் வாக்குமூலம் அளித்தனர்.

இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:

கடந்த, 3ல் செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் குமார், ஜெகன் ஆகியோர் பவானியில் ஒரு இடத்தில் மது அருந்தினர். பின், அங்கிருந்து புறப்பட்டு சங்ககிரி அருகே, பால்மடை பகுதியில் கூலிப்படையினரான வசந்த், விக்னேஷ், அசோக், வீரசங்கர், ராகுல் ஆகியோர் தயார் நிலையில் வைத்திருந்த மற்றொரு காரில் புறப்பட்டு, மல்லசமுத்திரம் அருகே, ராமாபுரம் பூங்காவில் மீண்டும் மது அருந்தினர். அங்கு வந்த செல்வத்தின் மகன் பிரவீன்குமார், மருமகன் கார்த்திக், சம்பந்தி வடிவேல் ஆகியோர் செல்வத்திடம், 'தங்களுக்கு சொந்தமான, 8.5 ஏக்கர் நிலத்தை பிரவீன்குமாருக்கு தான் எழுதி வைக்க வேண்டும்' என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்கு செல்வம் உடன்படவில்லை. அப்போது ஏற்பட்ட தகராறில், அங்கிருந்த கல்லால் செல்வத்தின் தலையில் அடித்துள்ளனர். பின், காரில் வைத்திருந்த பீர் பாட்டில், கடப்பாரையை கொண்டு பலமாக தாக்கியுள்ளனர். இதனால், பலத்த காயமடைந்த செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன்பின், செல்வத்தின் உடலை எலச்சிபாளையம் அருகே, திம்மராவுத்தம்பட்டி ஏரியில் புதைத்துள்ளனர். கொலைக்கு பயன்படுத்திய கடப்பாரை, மண்வெட்டியை அருகிலிருந்த உஞ்சனை ஏரியிலும், துணிகளை ஜேடர்பாளையம் காவிரியாற்றிலும் வீசி சென்றுள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம், கூலிப்படையினர் குமாரபாளையம் டாஸ்மாக்கில் மது அருந்திவிட்டு, கொலை செய்ததற்காக பெற்ற பணத்தை பிரித்துள்ளனர். அப்போது, அவர்களுக்குள்ளேயே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தபோது, செல்வத்தை கொலை செய்ததற்காக வாங்கிய பணத்தை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டது என ஒப்புக்கொண்டனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கொலைக்கு தொடர்புடைய மேலும் சில குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தேடிவருவதாக போலீசார் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us