/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/வரும் ஏப்., 21ல் கும்பாபிேஷகம் கந்தசாமி கோவில் திருப்பணி விறுவிறுவரும் ஏப்., 21ல் கும்பாபிேஷகம் கந்தசாமி கோவில் திருப்பணி விறுவிறு
வரும் ஏப்., 21ல் கும்பாபிேஷகம் கந்தசாமி கோவில் திருப்பணி விறுவிறு
வரும் ஏப்., 21ல் கும்பாபிேஷகம் கந்தசாமி கோவில் திருப்பணி விறுவிறு
வரும் ஏப்., 21ல் கும்பாபிேஷகம் கந்தசாமி கோவில் திருப்பணி விறுவிறு
ADDED : பிப் 25, 2024 03:30 AM
ஆட்டையாம்பட்டி: நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டி
கந்தசாமி கோவில் கும்பாபிேஷகம் வரும் ஏப்., 21ல் நடக்க உள்ளது. இதற்கு, 2023 டிச., 15ல், கோவில் விமானங்கள் எனும் கோபுரங்களுக்கு, சிறப்பு யாக பூஜையுடன் பாலாலயம் செய்யப்பட்டது. தொடர்ந்து திருப்பணி நடந்து வருகிறது.
முதல்கட்டமாக ராஜ கோபுரம் உள்பட முன் மண்டப மேற்கூரை, துாண்கள், சிலைகளை மராமத்து செய்து வண்ணம் அடிக்கப்பட்டது. தற்போது கோவில் கொடிமர மண்டபம் உள்பட சுற்றுப்புற மண்டப மேற்கூரை, கருவறை கோபுர சிலைகளுக்கு வண்ணம் அடிக்கும் பணி, மேல்தள மராமத்து பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மார்ச்சில் மூலவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பாலாலயம் செய்து மராமத்து பணியை முடித்து ஏப்ரல் முதல் வாரம் முகூர்த்த கம்பம் நட்டு கும்பாபி ேஷக விழா தொடங்கும். ஏப்., 21 காலை, 8:00 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் கும்பாபி ேஷகம் நடத்தப்பட உள்ளதாக, செயல் அலுவலர் மணிகண்டன், பரம்பரை அறங்காவலர் சந்திரலேகா தெரிவித்தனர்.