Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நோயால் நாற்றங்கால் பாதிப்பு: விவசாயி வேதனை

நோயால் நாற்றங்கால் பாதிப்பு: விவசாயி வேதனை

நோயால் நாற்றங்கால் பாதிப்பு: விவசாயி வேதனை

நோயால் நாற்றங்கால் பாதிப்பு: விவசாயி வேதனை

ADDED : செப் 14, 2025 04:45 AM


Google News
பள்ளிப்பாளையம்: மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில், கடந்த, இரண்டு மாதமாக தண்ணீர் வருகிறது.

வாய்க்காலில் வரும் தண்ணீரை பயன்படுத்தி, பள்ளிப்பா-ளையம் சுற்று வட்டார பகுதி விவசாயிகள் நெல் சாகுபடி செய்ய தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், வீரப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த விஸ்வ-நாதன் என்ற விவசாயி, நெல் சாகுபடி செய்ய வயலில் நாற்-றங்கால் விட்டுள்ளார். இந்த நாற்றுகள் நோயால் பாதிக்கப்பட்-டுள்ளன. இதனால், விவசாயி வேதனையடைந்துள்ளார்.

இதுகுறித்து, விவசாயி விஸ்வநாதன் கூறியதாவது:

என் வயலில், கடந்த, 15 நாட்களுக்கு முன் விதை நெல் நாற்-றங்கால் விட்டேன். குறிப்பிட்ட அளவு வளர்ச்சியடைந்தவுடன் நாற்றங்காலை பிடுங்கி வயலில் நடவு செய்ய வேண்டும். ஆனால், நாற்றங்கால் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. பசுமை நிறமாக காணப்பட்ட நாற்றங்கால் நிறமாறி பழுப்பு நிறத்தில், கரு-கிய நிலையில் காணப்படுகிறது.

இவ்வாறு கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us