/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/புகையிலை பதுக்கிய வடமாநில வாலிபர் கைதுபுகையிலை பதுக்கிய வடமாநில வாலிபர் கைது
புகையிலை பதுக்கிய வடமாநில வாலிபர் கைது
புகையிலை பதுக்கிய வடமாநில வாலிபர் கைது
புகையிலை பதுக்கிய வடமாநில வாலிபர் கைது
ADDED : ஜூலை 10, 2024 07:03 AM
குமாரபாளையம்: குமாரபாளையம், சுந்தரம் நகரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், எஸ்.ஐ., கங்காதரன் உள்ளிட்ட போலீசார், அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு வீட்டில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜூ சிங், 20, என்பவர் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்த போலீசார், 60 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.