/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பி.ஜி.பி., பொறியியல் கல்லுாரியில் தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு பி.ஜி.பி., பொறியியல் கல்லுாரியில் தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு
பி.ஜி.பி., பொறியியல் கல்லுாரியில் தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு
பி.ஜி.பி., பொறியியல் கல்லுாரியில் தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு
பி.ஜி.பி., பொறியியல் கல்லுாரியில் தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு
ADDED : மே 12, 2025 03:50 AM
நாமக்கல்,: நாமக்கல், பி.ஜி.பி., பொறியியல் கல்லுாரியில், தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் துறை இணைந்து, 'ப்யூஷன்- எக்ஸ்-2025' என்ற தலைப்பில், ஒருநாள் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கை நடத்தின. செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறை தலைவர் ராஜசேகர் வரவேற்றார். பி.ஜி.பி., கல்வி நிறுவன குழும தலைவர் பழனி ஜி பெரியசாமி, கற்றலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசினார்.
பெங்களூருவில் உள்ள ஐ.சி.எப்., இன்டர்நேஷனலின் எரிசக்தி சந்தை ஆய்வாளர் மதன் நாகராஜன், செயற்கை நுண்ணறிவு மற்றும் எரிசக்தி சந்தைகளில் வளர்ந்து வரும் போக்குகள் குறித்து பேசினார். பி.ஜி.பி., கல்வி நிறுவனங்களின் குழும நிர்வாகி கணபதி தலைமை வகித்தார். பி.ஜி.பி., கல்வி நிறுவன குழும டீன் பெரியசாமி, மாணவர்களை ஊக்குவித்து பேசினார். கல்லுாரி முதல்வர் கவிதா, தொழில்நுட்ப கருத்தரங்குகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். தகவல் தொழில்நுட்பத்துறை உதவி பேராசிரியர் ரம்யா நன்றி தெரிவித்தார். பல்வேறு பொறியியல் கல்லுாரிகள், பல்கலைகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று தொழில்நுட்ப திறமைகளை வெளிப்படுத்தினர்