/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பூக்கள் உதிர்வால் முருங்கை விலை உயர்வு பூக்கள் உதிர்வால் முருங்கை விலை உயர்வு
பூக்கள் உதிர்வால் முருங்கை விலை உயர்வு
பூக்கள் உதிர்வால் முருங்கை விலை உயர்வு
பூக்கள் உதிர்வால் முருங்கை விலை உயர்வு
ADDED : மே 12, 2025 03:49 AM
வெண்ணந்துார்: சூறாவளி காற்றுக்கு முருங்கைப்பூ உதிர்ந்ததால் விளைச்சல் குறைந்து விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.
வெண்ணந்துார் ஒன்றியத்துக்குட்பட்ட நடுப்பட்டி, மின்னக்கல், நெ.3.கொமராபாளையம், பொன்பரப்பிப்பட்டி, தொட்டிய வலசு, தேங்கல்பாளையம் பகுதிகளில் முருங்கை சாகுபடி அதிகளவில் நடக்கிறது. தற்போது, கோடை மழையில் வீசிய சூறாவளி காற்றால், முருங்கை மரத்தில் பூத்திருந்த பூக்கள் உதிர்ந்தன. இதனால் சாகுபடி குறைந்தது. சாகுபடி குறைந்ததால், சேலம், நாமக்கல் மார்க்கெட்டுக்கு முருங்கை வரத்து வெகுவாக குறைந்தது. சில மாதங்களுக்கு முன் ஒரு கிலோ முருங்கை, 10 ரூபாய்க்கு விற்றது. தற்போது, வரத்து குறைந்ததால் விலை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு கிலோ முருங்கை, 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் முருங்கை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.