ADDED : ஜூன் 21, 2024 07:11 AM
நாமகிரிப்பேட்டை : நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கொ.ம.தே.க.,வை சேர்ந்த எம்.பி., மாதேஸ்வரன் நேற்று நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலில் வழிபட்ட பின்தான் தன் நன்றி தெரிவிப்பு ஊர்வலத்தை துவக்கினார். பின்னர், மெட்டாலா மாரியம்மன் கோவில், செல்லியம்பாளையயம், கரலாக்காடு, சுப்ரமணியர் கோவில், உடையார்பாளையம், நாவல்பட்டி, மங்களபுரம், ஊத்துப்புளிக்காடு, நா.காட்டூர், ஆவாரங்கொரை, கோரையாறு, உரம்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். எம்.,பியுடன், முன்னாள் எம்.எல்.ஏ.,வும் தி.மு.க., ஒன்றிய செயலாளருமான ராமசுவாமி, மாவட்ட பொருளாளர் பாலச்சந்தர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.