/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ராசிபுரம் சுற்று பகுதியில் காற்றுடன் கன மழைராசிபுரம் சுற்று பகுதியில் காற்றுடன் கன மழை
ராசிபுரம் சுற்று பகுதியில் காற்றுடன் கன மழை
ராசிபுரம் சுற்று பகுதியில் காற்றுடன் கன மழை
ராசிபுரம் சுற்று பகுதியில் காற்றுடன் கன மழை
ADDED : ஜூன் 21, 2024 07:06 AM
ராசிபுரம் : ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில், நேற்று மாலை காற்றுடன் கன மழை பெய்தது.
ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை, 4:00 மணியளவில் பலத்த சூறை காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. ராசிபுரம், மசக்காளிப்பட்டி, ஆண்டகலுார் கேட், கண்டம்பாளையம், அணைப்பாளையம், காக்காவேரி, சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை, ஆர்.புதுப்பட்டி, பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில், 2 மணி நேரம் காற்றுடன் மழை பெய்தது. வேகமாக காற்று அடித்ததால் சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்தன.மேலும், சாலையோரம் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வயல்களில் தண்ணீர் தேங்கியது. காற்றுடன் கன மழை பெய்ததால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி முடியும் நேரத்தில் மழை பெய்ததால் மாணவர்கள் நனைந்து கொண்டே வீடுகளுக்கு சென்றனர்.