/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரிக்கு காளியண்ணன் பெயர் சூட்ட கையெழுத்து இயக்கம்நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரிக்கு காளியண்ணன் பெயர் சூட்ட கையெழுத்து இயக்கம்
நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரிக்கு காளியண்ணன் பெயர் சூட்ட கையெழுத்து இயக்கம்
நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரிக்கு காளியண்ணன் பெயர் சூட்ட கையெழுத்து இயக்கம்
நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரிக்கு காளியண்ணன் பெயர் சூட்ட கையெழுத்து இயக்கம்
ADDED : ஜன 29, 2024 11:27 AM
மல்லசமுத்திரம்: 'நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, டி.எம்.காளியண்ணன் பெயரை வைக்க வேண்டும்' என, தமிழக அரசை வலியுறுத்தி, காளிப்பட்டி, மல்லசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
இதுகுறித்து, டி.எம்.காளியண்ணன் பவுண்டேசன் நிறுவன தலைவர் செந்தில் கூறியதாவது:
டி.எம்.காளியண்ணன், இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராக, நம் இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய, நம் தேசத்தந்தைகளில் ஒருவர். இந்திய அரசியல் நிர்ணய சபையிலும், சுதந்திர இந்தியாவின் முதல் பார்லிமென்ட் மற்றும் தமிழகத்தின் முதல் சட்டசபை என, மூன்று சபைகளிலும் உறுப்பினர் என்ற பெருமைக்குரியவர்.
ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட நாட்டாண்மை கழகத்தின் தலைவராக, மேற்கு தமிழகத்தில் ஒரே ஆண்டில், 2,000க்கும் மேற்பட்ட பள்ளிகளை திறந்து, நமது கல்வி கண்களைத் திறந்த, கல்வி தந்தை. கொல்லிமலைக்கு உலக புகழ்பெற்ற கொண்டை ஊசி சாலையை அமைத்தவர். மேட்டூர் அணையில் கிழக்கு கரை மற்றும் மேற்கு கரை கால்வாய்கள் அமைத்து, சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களுக்கு பாசன வசதி செய்து கொடுத்தவர். அவரது அரசியல், சமூக, சமுதாய பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, அவரது பெயரை சூட்ட வேண்டும் என, 50,000க்கும் மேற்பட்டோரிடம் கையெழுத்துகளை பெற்ற பின், முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.