/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நாமக்கல் மாநகர அ.தி.மு.க., கட்சி அலுவலகம் திறப்பு நாமக்கல் மாநகர அ.தி.மு.க., கட்சி அலுவலகம் திறப்பு
நாமக்கல் மாநகர அ.தி.மு.க., கட்சி அலுவலகம் திறப்பு
நாமக்கல் மாநகர அ.தி.மு.க., கட்சி அலுவலகம் திறப்பு
நாமக்கல் மாநகர அ.தி.மு.க., கட்சி அலுவலகம் திறப்பு
ADDED : செப் 21, 2025 12:53 AM
நாமக்கல்,நாமக்கல் மெயின் ரோட்டில், நேதாஜி சிலை அருகில், அ.தி.மு.க., மாநகர அலுவலகம் செயல்பட்டு வந்தது. தற்போது, அந்த அலுவலகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மாநகர அ.தி.மு.க., செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான பாஸ்கர் தலைமை வகித்தார். சேந்தமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.
நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க., பொருளாளர் காளியப்பன், புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து கட்சியினர், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. முன்னாள் நகராட்சி தலைவர் கரிகாலன், அ.தி.மு.க, பொதுக்குழு உறுப்பினர் மயில்சுந்தரம், முன்னாள் நகர வங்கி தலைவர் கண்ணன், ஒன்றிய செயலர்கள் சேகர், செல்வ குமார், ஜெ., பேரவை மாவட்ட துணைத் தலைவர் குணசேகரன், நகர, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.