/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வீடியோ கேமரா, மொபைல் திருடிய பீஹார் வாலிபர் கைது வீடியோ கேமரா, மொபைல் திருடிய பீஹார் வாலிபர் கைது
வீடியோ கேமரா, மொபைல் திருடிய பீஹார் வாலிபர் கைது
வீடியோ கேமரா, மொபைல் திருடிய பீஹார் வாலிபர் கைது
வீடியோ கேமரா, மொபைல் திருடிய பீஹார் வாலிபர் கைது
ADDED : செப் 21, 2025 12:53 AM
திருச்செங்கோடு. திருச்செங்கோடு அருகே, கைலாசம்பாளையத்தில் உள்ள போட்டோ ஸ்டூடியோவில் இருந்து, ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள வீடியோ கேமரா மற்றும் மொபைல்போன் திருடியது தொடர்பாக, பீஹார் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருச்செங்கோடு அடுத்துள்ள கைலாசம்பாளையத்தில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருபவர் கோகுல்ராஜ். 41. இவர் நேற்று முன்தினம், சேந்தமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சிக்காக, ஆறு கேமராக்களை கொண்டு சென்று விட்டு இரவு, 1:00 மணியளவில் கைலாசம்பாளையம் வந்துள்ளார்.
நள்ளிரவு நேரம் என்பதால் வீடியோகிராபர்கள் ராஜா, செல்வகுமார் ஆகியோர் கடையின் கதவை திறந்து, ஒரு பெஞ்சில் கேமரா, மொபைல்போன்களை வைத்து விட்டு துாங்கினர்.
நேற்று காலை 9:00 மணியளவில் பார்த்தபோது வீடியோ கேமரா, இரண்டு மொபைல்போன்கள் காணவில்லை. திருச்செங்கோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி, மொபைல்போன் எண்ணை டிரேஸ் செய்ததில், ஆட்டையாம்பட்டி அருகே செங்கல் சூளையில் வேலை செய்து வந்த பீஹாரை சேர்ந்த வாலிபர் விக்கி
குமாரிடம் இருந்தது
தெரியவந்தது.
இதையடுத்து, ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள வீடியோ கேமரா, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு மொபைல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து, விக்கிகுமாரை கைது செய்தனர்.