/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/புதுமைப்படுத்தப்படும் நாமக்கல் அம்மா பூங்காபுதுமைப்படுத்தப்படும் நாமக்கல் அம்மா பூங்கா
புதுமைப்படுத்தப்படும் நாமக்கல் அம்மா பூங்கா
புதுமைப்படுத்தப்படும் நாமக்கல் அம்மா பூங்கா
புதுமைப்படுத்தப்படும் நாமக்கல் அம்மா பூங்கா
ADDED : ஜூலை 05, 2024 12:16 AM
நாமக்கல்: நாமக்கல் அம்மா பூங்கா நீண்ட இடைவெளிக்கு பின், புதுப்பிக்-கப்படுகிறது.நாமக்கல் நகரின் மையப்பகுதியில் கமலாலய குளம் அமைந்-துள்ளது.
அதன் அருகே, அ.தி.மு.க., ஆட்சியின் போது எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதி மூலம் அம்மா பூங்கா அமைக்கப்-பட்டது. அப்போது செயற்கை நீர்வீழ்ச்சி, குழந்தைகள் விளை-யாடும் கருவிகள், விளையாட்டு உபகரணங்கள், படகு சவாரி உள்-ளிட்ட பல்வேறு பொழுது போக்கு உபகரணங்கள் அமைக்கப்பட்-டிருந்தது. அங்கு தினமும் ஏராளமான மக்கள், குடும்பத்தோடு வந்து குழந்தைகளை விளையாட வைத்து மகிழ்ந்தனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின், அம்மா பூங்காவை பராமரிப்-பதில் சுனக்கம் ஏற்பட்டது. அதேபோல் பராமரிப்பு கைவிடப்-பட்டு கிடப்பில் போடப்பட்டது. அருகே உள்ள கமலாலய குளத்து நீரில், விடுமுறை நாட்களில் மாணவர்கள், இளைஞர்கள் சிலர் மீன்பிடிப்பது, குளிப்பது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட்டனர்.இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அம்மா பூங்காவை புதுப்பிக்கும் பணி நேற்று துவங்ககியது. அங்கு படர்ந்திருந்த புதர்களை அகற்றியும், விளையாட்டு உபகர-ணங்களை சீரமைக்கும் பணியை தொழிலாளர்கள் மேற்கொண்-டுள்ளனர்.