/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ எக்ஸல் இன்ஜினியரிங் கல்லுாரி தேசிய தரவரிசையில் முன்னேற்றம் எக்ஸல் இன்ஜினியரிங் கல்லுாரி தேசிய தரவரிசையில் முன்னேற்றம்
எக்ஸல் இன்ஜினியரிங் கல்லுாரி தேசிய தரவரிசையில் முன்னேற்றம்
எக்ஸல் இன்ஜினியரிங் கல்லுாரி தேசிய தரவரிசையில் முன்னேற்றம்
எக்ஸல் இன்ஜினியரிங் கல்லுாரி தேசிய தரவரிசையில் முன்னேற்றம்
ADDED : ஜூலை 04, 2024 11:10 AM
குமாரபாளையம்: 'இந்தியா டுடே' தரவரிசை பட்டியலில், தமிழகத்தின் சிறந்த தனியார் பொறியியல் கல்லுாரிகளில், குமாரபாளையம் எக்ஸல் பொறியியல் கல்லுாரி, 36வது இடத்தையும், தேசிய அளவில், 74வது இடத்தையும் பிடித்துள்ளது. இதேபோல், 'தி வீக்' நடத்திய ஆய்வில், தமிழகத்தின் முன்னணி தனியார் கல்வி நிறுவனங்களில், 8வது இடத்தை பிடித்துள்ளது. மேலும், தமிழகத்தின் முதல், 16 தனியார் பொறியியல் கல்லுாரிகளில் இடம் பிடித்துள்ளது. தென்னிந்தியாவில், 59வது இடத்திலும், ஒட்டுமொத்தமாக, 97வது இடத்திலும் உள்ளது. அனைத்து இந்திய பொறியியல் கல்லுாரிகளில், 125வது இடத்தில் உள்ளது.
இதுகுறித்து, எக்ஸல் கல்வி நிறுவன தலைவர் நடேசன் கூறுகையில், ''தரமான கல்வியை வழங்குவதில், எங்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்கான எங்கள் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு இந்த தரவரிசை சான்றாகும்,'' என்றார். முதல்வர் பொம்மண்ணராஜா கூறுகையில், ''தொழில்துறை சார்ந்த பாடத்திட்டத்தை உருவாக்குவதில் எங்களின் கவனம் மற்றும் நடைமுறை கற்றலுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது இந்த சாதனைகளுக்கு கணிசமான பங்களிப்பை அளித்துள்ளது,'' என்றார்.