Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 20ல் நவீன முறையில் தேனீ வளர்ப்பு பயிற்சி

20ல் நவீன முறையில் தேனீ வளர்ப்பு பயிற்சி

20ல் நவீன முறையில் தேனீ வளர்ப்பு பயிற்சி

20ல் நவீன முறையில் தேனீ வளர்ப்பு பயிற்சி

ADDED : மே 18, 2025 05:20 AM


Google News
நாமக்கல்: 'உலக தேனீ தினத்தையொட்டி, வரும், 20ல், நவீன முறையில் தேனீ வளர்ப்பு தொழில் நுட்பங்கள் குறித்து இலவச பயிற்சி முகாம் நடக்கிறது' என, வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், உலக தேனீ தினத்தை முன்னிட்டு, வரும், 20ல், காலை, 10:00 மணிக்கு, 'நவீன முறையில் தேனீ வளர்ப்பு தொழில் நுட்பங்கள்' என்ற தலைப்பில், ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடக்கிறது.

இப்பயிற்சியில், தேனீக்களின் வகைகள், நவீன முறையில் தேனீக்-களை வளர்க்கும் முறை, தேவையான உபகரணங்கள், தேனை பிரித்தெடுக்கும் முறை மற்றும் தேனீ வளர்ப்புக்கேற்ற பயிர் சாகு-படி முறைகள் குறித்து விளக்கப்படும்.

மேலும், இப்பயிற்சியை பெற்று தேனீ வளர்ப்பு ஆர்வம் உள்ள-வர்களுக்கு, தேனீக்கள் மற்றும் அதற்கான உபகரணங்கள் விலைக்கு வாங்கி தரப்படும். இதில், விவசாயிகள், விவசாயம் சார்ந்த களப்பணியாளர்கள், பண்ணை மகளிர்கள், படித்த வேலையில்லாத பட்டதாரி இளைஞர்கள் மற்றும் சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம்.

விருப்பம் உள்ளவர்கள், வேளாண் அறிவியல் நிலையத்தை நேரிலோ அல்லது 04286-206345, 266050, 7010580683, 9597746373, 9943008802 ஆகிய தொலைபேசி மற்றும் மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு தங்களது பெயரை முன்பதிவு செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us