Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/வரும் 8ல் மொபைல் போன் பழுது பார்க்கும் பயிற்சி

வரும் 8ல் மொபைல் போன் பழுது பார்க்கும் பயிற்சி

வரும் 8ல் மொபைல் போன் பழுது பார்க்கும் பயிற்சி

வரும் 8ல் மொபைல் போன் பழுது பார்க்கும் பயிற்சி

ADDED : ஜன 05, 2024 11:37 AM


Google News
நாமக்கல்: இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் ஆண், பெண் இருபாலருக்கான மொபைல் போன் பழுது பார்க்கும் பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளது.

இது குறித்து பயிற்சி நிறுவன இயக்குனர் ராஜேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கை: மொபைல் போன் பழுது பார்க்கும் பயிற்சி வகுப்பு வரும், 8ம் தேதி தொடங்கி, 30 வேலை நாட்களுக்கு நடைபெற உள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர், கிராமப்புற நபர்களின் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயிற்சிக்கு, 35 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்க பட இருப்பதால் முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வரும், 8ம் தேதிக்குள் நேரில் வந்து விண்ணப்பங்களை, இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், 3/151, ரவின்பிளாசா, திருச்சி சாலை, ரயில்வே மேம்பாலம் அருகில், நாமக்கல் என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

குறைந்தபட்ச கல்வி தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும், பயிற்சிக்கான செலவு, சான்றிதழ், பயிற்சி பொருட்கள், தேனீர், சிற்றுண்டி, உணவு என அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04286- 221004 என்ற தொலைபேசியிலும் அல்லது 96989 96424, 8825908170 என்ற மொபைல் எண்களிலும் தொடர்பு கொள்ளாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us