/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரி முதலாண்டு மாணவர்களுக்கு வழிகாட்டு பயிற்சிநாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரி முதலாண்டு மாணவர்களுக்கு வழிகாட்டு பயிற்சி
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரி முதலாண்டு மாணவர்களுக்கு வழிகாட்டு பயிற்சி
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரி முதலாண்டு மாணவர்களுக்கு வழிகாட்டு பயிற்சி
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரி முதலாண்டு மாணவர்களுக்கு வழிகாட்டு பயிற்சி
ADDED : ஜூலை 11, 2024 12:41 AM
நாமக்கல்: நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில் முத-லாண்டு மாணவ, மாணவியருக்கு வழிகாட்டும் பயிற்சி முகாம் நடந்தது.தமிழகம் முழுதும் உள்ள அரசு கலை கல்லுாரியில், முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர் சேர்க்கை நடந்து வருகிறது.
'பிளஸ் 2 முடித்து, அரசு கலை அறிவியல் கல்லுாரியில் புதிதாக சேர்க்கப்-பட்ட மாணவ, மாணவியருக்கு புத்தாக்க பயிற்சி மற்றும் வழி-காட்டும் பயிற்சி நடத்த வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் உத்-தரவிட்டுள்ளார்.அதன்படி, கல்லுாரி கல்வி இயக்குனர் கார்மேகம் அறிவுறுத்தல்-படி, தமிழகம் முழுதும் அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் முதலாமாண்டு சேர்க்கை பெற்ற பல்வேறு துறைகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு புத்தாக்க பயிற்சி மற்றும் வழிகாட்டும் பயிற்சி நடந்து வருகிறது. நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில், முதலாம் ஆண்டு மாணவ, மாணவியருக்-கான புத்தாக்க பயிற்சி மற்றும் வழிகாட்டும் பயிற்சி முகாம் நடந்-தது. கல்லுாரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார். பேராசிரி-யர்கள் குமாரவேலு, சுஜாதா, தங்கவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியாளர் ருகையா பேகம், இளைஞர் நீதிச் சட்டம், போக்சோ சட்டம் மற்றும் மோட்டார் வாகன சட்டம் குறித்து விளக்கினார். தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை முன்னாள் பதிவாளரும், சேலம் அரசு கலை கல்லுாரி முன்னாள் முதல்வருமான கலைச்செல்வன், சேலம் அரசு கலை கல்லுாரி உள்தர உறுதி மைய ஒருங்கிணைப்-பாளர் விஜயகுமார், சமூக நலத்துறை ஆலோசகர் பிரிஸ்கில்லா, பிசியோ தெரபிஸ்ட்டுகள் ஜெயந்தி, அர்ச்சனா உள்ளிட்டோர் பேசினார்.