/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/'கல்பனா சாவ்லா' விருது; விண்ணப்பம் வரவேற்பு'கல்பனா சாவ்லா' விருது; விண்ணப்பம் வரவேற்பு
'கல்பனா சாவ்லா' விருது; விண்ணப்பம் வரவேற்பு
'கல்பனா சாவ்லா' விருது; விண்ணப்பம் வரவேற்பு
'கல்பனா சாவ்லா' விருது; விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஜூலை 11, 2024 12:41 AM
நாமக்கல்: 'மாநில அளவில், 'கல்பனா சாவ்லா' விருது பெற தகுதியான பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழக அரசின், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம், 2024ம் ஆண்டில் சிறந்த சாதனை புரிந்த பெண்களுக்கு, வரும் ஆக., 15ல் நடக்கும் சுதந்திர தின விழாவில், மாநில அளவில் ஒருவருக்கு, 'கல்பனா சாவ்லா' விருது வழங்கப்படவுள்ளது.
இந்த விருது பெற, பெண்களில் சிறந்த சாதனை புரிந்த நபரிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. இவ்விருதுக்கான விண்ணப்ப விபரங்களை, தமிழக அரசின் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தை பார்வையிட்டு, ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வரும், 15 வரை பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிந்துரைக்கப்படும். விபரங்களுக்கு, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட சமூக நல அலுவலரை நேரிலோ அல்லது 04286 -299460 என்ற தொலைபேசி மூலமோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.