/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மஞ்சப்பை விருது: தகுதியான பள்ளி, கல்லூரி வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்க அழைப்புமஞ்சப்பை விருது: தகுதியான பள்ளி, கல்லூரி வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்க அழைப்பு
மஞ்சப்பை விருது: தகுதியான பள்ளி, கல்லூரி வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்க அழைப்பு
மஞ்சப்பை விருது: தகுதியான பள்ளி, கல்லூரி வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்க அழைப்பு
மஞ்சப்பை விருது: தகுதியான பள்ளி, கல்லூரி வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜன 29, 2024 11:25 AM
நாமக்கல்: 'மஞ்சப்பை விருது பெற, தகுதியான, பள்ளி, கல்லுாரிகள், வணிக நிறுவனங்கள், வரும், மே, 1க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: 'மீண்டும் மஞ்சப்பை' பிரசாரத்தை முன்னெடுத்து செல்லும் வகையில், ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியப்படும் நெகிழியின் தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு, 'மஞ்சப்பை விருது' வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கைப்பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு, உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவித்து, சிறப்பாக செயல்படுத்தும் மாநில அளவில், 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லுாரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இவ்விருது வழங்கப்படும்.
விருது பெறுவோர்களுக்கு, முதல் பரிசு, பத்து லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசு, ஐந்து லட்சம் ரூபாய், மூன்றாம் பரிசு, மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்படும். இந்த அறிவிப்பின்படி, தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால், பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு, 'மஞ்சப்பை விருது' வழங்கப்படும்.
இதற்காக, மாவட்ட அளவிலான தேர்வுக்குழுவினரின் பரிந்துரைக்கான விண்ணப்ப படிவங்கள், கலெக்டர் அலுவலக இணையதளமான, Namakkal.nic.inல் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்க, வரும் மே, 1 கடைசி நாள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.