/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/அருவியில் குறைந்த தண்ணீர் சுற்றுலா பயணியர் ஏமாற்றம்அருவியில் குறைந்த தண்ணீர் சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
அருவியில் குறைந்த தண்ணீர் சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
அருவியில் குறைந்த தண்ணீர் சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
அருவியில் குறைந்த தண்ணீர் சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
ADDED : பிப் 12, 2024 11:28 AM
எருமப்பட்டி: நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலை முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது.
இங்கு, வாரந்தோறும் ஞாயிற்றுகிழமையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்தாண்டு கொல்லிமலையில் போதிய மழையில்லாததால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்மருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் மிக
குறைந்தளவில் கொட்டி வருகிறது.
இதனால், வெளியூரில் இருந்து குழந்தைகளுடன் வந்த சுற்றுலா பயணியர் குறைந்தளவில் வரும் தண்ணீல் குளித்து சென்றனர். மேலும், அரப்
பளீஸ்வரர் கோவில், சீக்குபாறை, தவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற சுற்றுலா பயணிகள், கொல்லிமலை அழகை ரசித்தனர்.