/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/29ல் 'உங்களை தேடி' முகாம் நாளை மனு அளிக்க அழைப்பு29ல் 'உங்களை தேடி' முகாம் நாளை மனு அளிக்க அழைப்பு
29ல் 'உங்களை தேடி' முகாம் நாளை மனு அளிக்க அழைப்பு
29ல் 'உங்களை தேடி' முகாம் நாளை மனு அளிக்க அழைப்பு
29ல் 'உங்களை தேடி' முகாம் நாளை மனு அளிக்க அழைப்பு
ADDED : மே 20, 2025 07:31 AM
சேந்தமங்கலம்: கொல்லிமலை தாலுகாவில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா, வரும், 29ல் நடக்கிறது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும் கலந்துகொண்டு, பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு தடையில்லாமல் நலத்திட்ட உதவி, மற்றும் சேவை வழங்க உள்ளனர்.
முன்னதாக, பொதுமக்கள் தங்கள் புகார் மனுக்களை, நாளை காலை, 10:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை வாழவந்திநாடு ஆர்.ஐ., அலுவலகம், திருப்புலி நாடு ஆர்.ஐ., அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் மனுக்களை கொடுக்கலாம் என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.