/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கொல்லிமலை சாலையில் மின்னணு போக்குவரத்து கணக்கெடுப்பு துவக்கம்கொல்லிமலை சாலையில் மின்னணு போக்குவரத்து கணக்கெடுப்பு துவக்கம்
கொல்லிமலை சாலையில் மின்னணு போக்குவரத்து கணக்கெடுப்பு துவக்கம்
கொல்லிமலை சாலையில் மின்னணு போக்குவரத்து கணக்கெடுப்பு துவக்கம்
கொல்லிமலை சாலையில் மின்னணு போக்குவரத்து கணக்கெடுப்பு துவக்கம்
ADDED : ஜூன் 01, 2024 06:28 AM
சேந்தமங்கலம் : நாமக்கல் மாவட்டத்தில், மூலிகைகள் நிறைந்த சுற்றுலா தலமாக கொல்லிமலை உள்ளது.
சேந்தமங்கலத்தை அடுத்துள்ள கொல்லிமலைக்கு செல்ல காரவள்ளி செக் போஸ்டில் இருந்து சோளக்காடு வரை, 70 கொண்டு ஊசி வளைவுகள் உள்ளன. ஒரு சில கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் ஆபத்தானதாக உள்ளதால், புதிதாக மலைக்கு வாகனங்கள் ஓட்டி வரும் டிரைவர்களுக்கு இந்த கொண்டை ஊசி வளைவு சவாலாகவே இருக்கும்.இந்நிலையில், விடுமுறை நாளான சனி, ஞாயிற்று கிழமை நாட்களில் கொல்லி மலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள், டூவீலர், கார், வேன்களில் சென்று வருகின்றனர். இதேபோல், மலையில் உள்ள விவசாயிகள் அங்கு உற்பத்தி செய்யப்படும் மிளகு, காபி, அன்னாச்சி, பலா ஆகியவற்றை விற்பனைக்காக ஆட்டோக்களில் சேந்தமங்கலம், நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு வருகின்றனர். இதனால், கொல்லிமலை மலைப்பகுதி சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.தற்போது, கொல்லி மலைக்கு வந்து செல்லும் வாகனங்களை கணக்கெடுக்கும் வகையில், மின்னணு போக்குவரத்து கணக்கெடுப்பிற்காக, காரவள்ளி சோதனை சாவடியில் கேமரா வைக்கப்பட்டு, 7 நாட்களுக்கு, தினமும் எத்தனை வாகனங்கள் சென்று வருகின்றன என்பதை கண்காணிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து, நெடுஞ் சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் சுப்பரமணி கூறியதாவது: நெடுஞ்சாலைத்துறையில், 3 ஆண்டுக்கு ஒருமுறை சாலை விரிவாக்கம் செய்வதற்காக, 7 நாட்கள் தொடர்ந்து பணியாளர்களை வைத்து வாகனங்கள் கணக்கெடுக்கப்பட்டு வந்தது. தற்போது, கேமராவை வைத்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில், 7 நாட்களில் எத்தனை வாகனங்கள் வந்து சென்றன, சாலை விரிவாக்கம் தேவையா என்பதை கண்டுபிடிக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.