/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கூலித்தொழிலாளி மர்ம மரணம் கேரளா போலீசார் விசாரணைகூலித்தொழிலாளி மர்ம மரணம் கேரளா போலீசார் விசாரணை
கூலித்தொழிலாளி மர்ம மரணம் கேரளா போலீசார் விசாரணை
கூலித்தொழிலாளி மர்ம மரணம் கேரளா போலீசார் விசாரணை
கூலித்தொழிலாளி மர்ம மரணம் கேரளா போலீசார் விசாரணை
ADDED : ஜூன் 13, 2024 06:57 AM
ப.வேலுார், : கேரளாவில் வேலை பார்த்த கூலி தொழிலாளி மர்மமான முறையில் இறந்ததால், இதுகுறித்து, கேரளா போலீசார், நேற்று ப.வேலுாரில் விசாரணை நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே அண்ணா நகரை சேர்ந்த பொன்னுசாமி மகன் தேவராஜன், 42; மனைவி செல்லம்மாள், 37. இவர்கள் இருவரும், கேரளா கொல்லங்கோடு பகுதியில் வசிக்கும் ஹரி, 50, என்பவரிடம், கூலி தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். கடந்த, 10ல் வேலைக்கு சென்று விட்டு இருவரும் வீடு திரும்பினர். அன்று மாலை, சம்பள பணம் வாங்க தேவராஜ் மட்டும் சென்றுள்ளார். பின் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, ஹரியிடம், செல்லம்மாள் போனில் கேட்டபோது, 'தேவராஜ் மயங்கி விழுந்து இறந்து விட்டார்' என தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த செல்லம்மாள், கணவன் தேவராஜன் உடலை பெற்றுக்கொண்டு சொந்த ஊர் திரும்பினார்.
இதையறிந்த, கேரளா கொல்லங்கோடு போலீசார், தேவராஜன் உறவினரிடம் தொடர்பு கொண்டு, 'உடலை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள்' என தெரிவித்தனர். அதன்படி, ப.வேலுார் அரசு மருத்துவமனையில், தேவராஜன் உடலை வைத்திருந்தனர். நேற்று, கேரளாவில் இருந்து வந்த போலீசார் முன்னிலையில், பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் தான், தேவராஜன் மரணம் குறித்து உண்மை நிலை தெரிய வரும் என, கேரளா போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம், ப.வேலுாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.