/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பொத்தனூரில் அ.தி.மு.க., சார்பில் கபடி போட்டிபொத்தனூரில் அ.தி.மு.க., சார்பில் கபடி போட்டி
பொத்தனூரில் அ.தி.மு.க., சார்பில் கபடி போட்டி
பொத்தனூரில் அ.தி.மு.க., சார்பில் கபடி போட்டி
பொத்தனூரில் அ.தி.மு.க., சார்பில் கபடி போட்டி
ADDED : பிப் 25, 2024 03:28 AM
ப.வேலுார்: -நாமக்கல் மாவட்டம், பொத்தனுார், அ.தி.மு.க., நகரம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76வது பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான கபடி போட்டி நேற்று தொடங்கியது.
நாமக்கல், சேலம், கரூர், திருச்சி, கோயமுத்துார் உள்பட, 30-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. கபடி போட்டி தொடர்ந்து இன்றும் நடக்கிறது. கபடி போட்டியை, பரமத்தி வேலுார் எம்.எல்.ஏ., சேகர் தலைமையில், பரமத்தி ராஹா ஆயில்ஸ் நிர்வாக இயக்குனர், நாமக்கல் மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் தமிழ்மணி துவக்கி வைத்தார்.
முன்னதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருஉருவ படத்திற்கு பொத்தனுார், அ.தி.மு.க., நகர செயலர் நாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவில் முன்னாள் அரசு வழக்கறிஞர் தனசேகர் மற்றும் பேரூர் நிர்வாகிகள், சார்பு நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பொத்தனுார், அதி.மு.க., சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.