ஜே.கே.கே., நடராஜா பள்ளி ஆண்டு விழா
ஜே.கே.கே., நடராஜா பள்ளி ஆண்டு விழா
ஜே.கே.கே., நடராஜா பள்ளி ஆண்டு விழா
ADDED : ஜன 13, 2024 03:51 AM
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், ஜே.கே.கே., நடராஜா மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது.இப்பள்ளி ஆண்டு விழா, தாளாளர் செந்தாமரை தலைமையில் நடந்தது.
திரைக்கலைஞர் அறந்தாங்கி நிஷா கலந்துகொண்டார்.அவர் மாணவர்களிடையே பேசியதாவது: முதல் பென்ச் மாணவர்களை விட, கடைசி பென்ச் மாணவர்கள் தான் வாழ்வில் பெரும்பாலும் சாதனை படைத்துள்ளனர். அவர்கள் தான் புத்தக படிப்புடன், வாழ்க்கை படிப்பையும் சேர்த்து படிக்கின்றனர். பெற்றோர் உங்கள் பிள்ளைகளை அடுத்தவர்களுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். அவர்கள் ஒவ்வொருவரும் தனித்துவமாக வெற்றி பெறுவர். பள்ளியில் தான், அடுத்தவர்களுடன் பகிர்ந்து உண்ணும் பழக்கம் துவங்குகிறது. அப்பாவின் உழைப்பை மதியுங்கள். ஆசிரியர்கள் வசம் அடி வாங்கியவர்கள் தான், வாழ்வில் படும் அடிகளை சமாளிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற, அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா பரிசு வழங்கி, பாராட்டினார்.