/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/தமிழகத்தில் மூடப்பட்ட மணல் குவாரிகளை திறக்க காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவுதமிழகத்தில் மூடப்பட்ட மணல் குவாரிகளை திறக்க காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு
தமிழகத்தில் மூடப்பட்ட மணல் குவாரிகளை திறக்க காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு
தமிழகத்தில் மூடப்பட்ட மணல் குவாரிகளை திறக்க காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு
தமிழகத்தில் மூடப்பட்ட மணல் குவாரிகளை திறக்க காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு
ADDED : ஜூலை 15, 2024 01:09 AM
நாமக்கல்: தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நாமக்கல் மாவட்டம், மோகனுாரில் நேற்று நடந்தது.
அப்போது, சம்மேளன தலைவர் செல்ல ராசா-மணி நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகம் முழுதும் இயங்கி வந்த அரசு மணல் குவாரிகள் மற்றும் அரசு மணல் விற்பனை கிடங்குகளில் முறைகேடு நடந்-துள்ளதாக, 2023 செப்., 23ல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, அனைத்து அரசு மணல் விற்பனை கிடங்குகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்-பட்டுள்ளன. அதனால், மணல் லோடு எடுப்பதற்கு என்றே வடிவ-மைக்கப்பட்ட, 55,000க்கும் மேற்பட்ட லாரிகள், வேலை-வாய்ப்பை இழந்துள்ளன.அதன் காரணமாக, 55,000 லாரி உரிமையாளர்கள், ஒரு லட்சத்-திற்கும் மேற்பட்ட டிரைவர்கள் வேலைவாய்ப்பை இழந்து, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மணல் குவா-ரிகள் இயங்காததால், அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிக-ளுக்கு மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு செயற்கை மணல் எம்.சாண்டை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்-ளனர்.மணல் லாரி உரிமையாளர்கள், டிரைவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, தமிழக முதல்வர் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்-பட்ட அனைத்து அரசு மணல் குவாரிகளையும், மாநில சுற்றுச்-சூழல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதித்த, 26 புதிய குவாரிக-ளையும் சேர்த்து திறக்க வேண்டும்.அரசு மணல் குவாரிகளை திறக்ககோரி தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் லாரிகளை, ஒரு இடத்தில் நிறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட உள்ளோம், அது தொடர்பான தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.