/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ஆண்டுக்கு ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சத்துக்கு காப்பீடுஆண்டுக்கு ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சத்துக்கு காப்பீடு
ஆண்டுக்கு ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சத்துக்கு காப்பீடு
ஆண்டுக்கு ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சத்துக்கு காப்பீடு
ஆண்டுக்கு ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சத்துக்கு காப்பீடு
ADDED : ஜூலை 09, 2024 05:54 AM
ராசிபுரம்: 'ஆண்டுக்கு, 755 ரூபாய் செலுத்தி, 15 லட்சம் ரூபாய் காப்பீடு பெறும் திட்டத்தை இந்திய அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது' என, பா.ஜ., மத்திய அரசு திட்டங்களின் துறை, மாநில துணைத்தலைவர் லோகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: இந்திய அஞ்சல் துறையின் பேமென்ட் பேங்க், 3 விபத்து காப்பீடுகளை அறிமுகம் செய்துள்ளது. 18 வயது முதல், 65 வயதுடைய நபர்கள் இந்த விபத்து காப்பீட்டில் இணைத்துக்கொள்ளலாம். திட்டம், 1ல் காப்பீடு தொகை, 5 லட்சம் ரூபாய், இதற்கு ஆண்டு பிரீமியமாக, 355 ரூபாய் செலுத்த வேண்டும். திட்டம், 2ல் காப்பீடு தொகை, 10 லட்சம் ரூபாய், இதற்கு ஆண்டு பிரீமியமாக, 555 ரூபாய் செலுத்த வேண்டும். திட்டம், 3ல், காப்பீடு தொகை, 15 லட்சம் ரூபாய், இதற்கு பிரீமியமாக, 755 ரூபாய் செலுத்த வேண்டும்.
விபத்தில் மரணமடைந்த குடும்பத்திற்கு, 100 சதவீதம் காப்பீடு தொகை வழங்கப்படும். விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டால், 25,000 ரூபாய் வழங்கப்படும். பாலிசி பெற விரும்பும் பொதுமக்கள் அருகில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகத்தையும் அனுகலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.