/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பள்ளிப்பாளையம் ஜி.ஹெச்.,ல் கும்பலாக திரியும் நாய்களால் அச்சம்பள்ளிப்பாளையம் ஜி.ஹெச்.,ல் கும்பலாக திரியும் நாய்களால் அச்சம்
பள்ளிப்பாளையம் ஜி.ஹெச்.,ல் கும்பலாக திரியும் நாய்களால் அச்சம்
பள்ளிப்பாளையம் ஜி.ஹெச்.,ல் கும்பலாக திரியும் நாய்களால் அச்சம்
பள்ளிப்பாளையம் ஜி.ஹெச்.,ல் கும்பலாக திரியும் நாய்களால் அச்சம்
ADDED : ஜூலை 09, 2024 05:54 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கும்பலாக சுற்றித்திரியும் தெருநாய்களால், சிகிச்சைக்கு வரும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பள்ளிப்பாளையம் அருகே, ஆவாரங்காடு பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு, தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக, சிறுவர்கள், குழந்தைகள் சிகிச்சைக்கு அதிகம் வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனையின் முன் பக்க வளாகத்தில் கும்பல் கும்பலாக தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. சில நேரம், ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொண்டு, மருத்துவமனைக்குள் நுழைவதால் நோயாளிகள் அச்சமடைகின்றனர். டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்களும் அச்சத்துடனேயே செய்வதறியாமல் வேலைகளை தொடர்கின்றனர். அந்தளவுக்கு நாய் தொல்லை அதிகரித்துள்ளது.
எனவே, அரசு மருத்துவமனை வளாகத்தில் நாய் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.