/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/அதிகரிக்கும் வெயிலின் தாக்கம் எலுமிச்சம் பழம் விலை உயர்வுஅதிகரிக்கும் வெயிலின் தாக்கம் எலுமிச்சம் பழம் விலை உயர்வு
அதிகரிக்கும் வெயிலின் தாக்கம் எலுமிச்சம் பழம் விலை உயர்வு
அதிகரிக்கும் வெயிலின் தாக்கம் எலுமிச்சம் பழம் விலை உயர்வு
அதிகரிக்கும் வெயிலின் தாக்கம் எலுமிச்சம் பழம் விலை உயர்வு
ADDED : பிப் 25, 2024 04:09 AM
கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், எலுமிச்சம் பழத்தின், விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங் களில் கோடை வெயில் சுட்டெரிக்கும். நடப்பாண்டு, பிப்ரவரி மாத துவக்கத்தில் இருந்து வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. கரூர் மாவட்டத்தில் கடந்த, ஐந்து நாட்களாக, வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. கோடைக்காலத்தில் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், பொதுமக்கள் எலுமிச்சம் பழம் ஜூஸ் அருந்துவது வழக்கம்.
கரூர் மாவட்டத்தில் எலுமிச்சை பழம் சாகுபடி அதிகளவில் இல்லை. கரூர் மாவட்ட எலுமிச்சம்பழம் தேவைக்கு வெளி மாவட்டத்தை நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது. தமிழகத்தில் திண்டுக்கல், புதுக்கோட்டை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, எலுமிச்சம் பழம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
கரூரில் கடந்த, இரண்டு மாதங்களுக்கு முன் கிலோ எலுமிச்சம் பழம், 40 ரூபாய் முதல், 50 ரூபாய் வரை விற்றது. தற்போது, கோடைக்காலம் தொடங்கும் நிலையில், குளிர்பானங்கள் தயாரிப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் தயாரிப்புக்கு எலுமிச்சம்பழம் தேவை அதிகரித்துள்ளது. இதனால் தற்போது, கிலோ எலுமிச்சம்பழம், 80 ரூபாய் முதல், 100 ரூபாய் வரை விற்பனையாகிறது. ஒரு பழம் 4 ரூபாய் முதல், 5 ரூபாய் வரை விற்பனையாகிறது.