/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/இடி, மின்னலுடன் கனமழை: மின் துண்டிப்பால் அவதிஇடி, மின்னலுடன் கனமழை: மின் துண்டிப்பால் அவதி
இடி, மின்னலுடன் கனமழை: மின் துண்டிப்பால் அவதி
இடி, மின்னலுடன் கனமழை: மின் துண்டிப்பால் அவதி
இடி, மின்னலுடன் கனமழை: மின் துண்டிப்பால் அவதி
ADDED : ஜூன் 07, 2024 12:15 AM
நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், நேற்று காலை முதல் வெப்பம் கடுமையாக இருந்தது. மாலை, 5:00 மணிக்கு கருமேகம் சூழ்ந்தது. தொடர்ந்து காற்றுடன் கன மழை பெய்தது. மாலை, 5:30 மணிக்கு தொடங்கிய மழை, இரவு வரை நீடித்தது. நாமக்கல் நகரில் பல இடங்களில் மின் வெட்டு ஏற்பட்டதால் மக்கள் அவதிப்பட்டனர். பரமத்தி சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. லாரி ஒன்று பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ்கள், குளக்கரை சாலை வழியாக திருப்பி விடப்பட்டது. கோட்டை சாலையில், பரமத்தி பிரிவு ரோடு பகுதியில் மாலை ஒன்று மின்கம்பியில் மாட்டியதால் தொடர்ந்து மின் வெட்டு ஏற்பட்டது.
மோகனுார், வளையப்பட்டி, வாழவந்தி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் மாலை, 5:00 மணி முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இரவு, 10:00 மணி வரை தொடர் மழை பெய்தது. மோகனுாரில், 5:00 மணிக்கு மின்வெட்டு ஏற்பட்டது. மீண்டும், 7:30 மணிக்கு தான் மின்சாரம் வந்தது. இதனால், மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.இதேபோல், நாமகிரிப்பேட்டை, சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, ராசிபுரம், சீராப்பள்ளி, புதுச்சத்திரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்தது.