ஓய்வு அரசு ஊழியர் வீட்டில் கைவரிசை
ஓய்வு அரசு ஊழியர் வீட்டில் கைவரிசை
ஓய்வு அரசு ஊழியர் வீட்டில் கைவரிசை
ADDED : செப் 21, 2025 01:43 AM
கோபி, ஈரோடு மாவட்டம் கோபி அருகே நஞ்சகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பண்ணன், 65, ஓய்வு பெற்ற அரசு ஊழியர். சேலத்தில் வசிக்கும் மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். கடந்த, 19ம் தேதி அதிகாலை வீட்டின் கதவு உடைக்கப்பட்டுள்ளதாக, பக்கத்து வீட்டுக்காரர்கள் மூலம் சுப்பண்ணனுக்கு தகவல் கிடைத்தது.
அவர் சென்று பார்த்தபோது, அறை கப்போர்டில் வைத்திருந்த அரை பவுன் எடையிலான இரு தங்க காசு, 20 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரிந்தது. அவர் புகாரின்படி கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.