/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ அதிக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவி: எம்.பி., ராஜேஸ்குமார் பாராட்டு அதிக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவி: எம்.பி., ராஜேஸ்குமார் பாராட்டு
அதிக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவி: எம்.பி., ராஜேஸ்குமார் பாராட்டு
அதிக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவி: எம்.பி., ராஜேஸ்குமார் பாராட்டு
அதிக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவி: எம்.பி., ராஜேஸ்குமார் பாராட்டு
ADDED : ஜூன் 02, 2025 06:51 AM
ராசிபுரம்: பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவியை, எம்.பி., ராஜேஸ்குமார் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்.
ராசிபுரம் ஒன்றியம், கூனவேலம்பட்டியை சேர்ந்தவர் ஹரிணி, 17; இவர் பாச்சல் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அரசு பொதுத்தேர்வில் மாணவி ஹரிணி, - 600க்கு, 592 மதிப்பெண் பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து நாமக்கல் கிழக்கு மாவட்ட
செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான ராஜேஸ்குமார் எம்.பி.,யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அம்மாணவி உயர்கல்வியில் மேலும் பல சாதனைகள்புரிய வாழ்த்தி நினைவு பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில், ராசிபுரம் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சிவசேகரன், துணை அமைப்பாளர் பொன்னுசாமி, கிளை கழக செயலாளர்கள் சரவணன், ஜெய்கணேஷ், மாணவியின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர்.