அரசு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 16, 2025 02:17 AM
நாமக்கல், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில், நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் இளவேந்தன் தலைமை வகித்தார்.
அதில், 27 நாளாக போராட்டம் நடத்திவரும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் தாமதமாக கிடப்பதை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு ஊழியர்கள் சங்க தலைவர் முருகேசன், தமிழக மின்வாரிய ஓய்வூதியர் நலச்சங்க மாநில செயலாளர் காளியப்பன், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் குப்புசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.