Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கருட பஞ்சமி விழா

லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கருட பஞ்சமி விழா

லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கருட பஞ்சமி விழா

லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கருட பஞ்சமி விழா

ADDED : ஜன 07, 2024 11:33 AM


Google News
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், கருட பஞ்சமி விழா நடந்தது. விழாவில், 10,108 தீபவிளக்குகள் ஏற்றி பெண்கள் வழிபாடு நடத்தினர்.

சேந்தமங்கலம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் கருட பஞ்சமி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு விழா, நேற்று முன்தினம் காலை தொடங்கி இரவு வரை நடந்தது. விழாவிற்கு, சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, முத்துகாபட்டி, பொட்டணம், காரவள்ளி, ஆர்.பி.புதுார் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

விழாவையொட்டி, லட்சுமி நாராயண பெருமாள் சுவாமி, கருடாழ்வார் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. வசந்த மண்டபத்தில் திருப்பதி ஏழுமலையான், மகாலட்சுமி, விஜயலட்சுமி, குபேரலட்சுமி, கஜலட்சுமி, தான்யலட்சுமி, தனலட்சுமி, சந்தானலட்சுமி, ராகவேந்திரா சுவாமி, கருடாழ்வார், லட்சுமி நராராயண பெருமாள் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்று, 10,108 மகா சகஸ்ர தீப விளக்குகள் ஏற்றி வைத்து வழிபட்டனர். கோவில்முன் திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us