/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ஹிந்தி எழுத்து தேர்வுக்கு இலவச பயிற்சி ஹிந்தி எழுத்து தேர்வுக்கு இலவச பயிற்சி
ஹிந்தி எழுத்து தேர்வுக்கு இலவச பயிற்சி
ஹிந்தி எழுத்து தேர்வுக்கு இலவச பயிற்சி
ஹிந்தி எழுத்து தேர்வுக்கு இலவச பயிற்சி
ADDED : ஜூலை 31, 2024 07:15 AM
நாமக்கல் : ஹிந்தி எழுத்து தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு, நாமக்கல்லில் இலவச பயிற்சி முகாம் நடந்தது.
ஹிந்தி பிரசார சபா சார்பில், ஹிந்தி மொழியில் பரிச்சயா, பிரத்மிக், மத்யமா, ராஷ்ட்ரபாஷா, பிரவேஷிகா, ராஷ்ட்ரபாஷா விஷரத் மற்றும் ராஷ்ட்ரபாஷா பிரவீன் ஆகிய நிலைகளில் தேர்வுகளை நடத்துகிறது. இந்த தேர்வுகள் மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு நடத்தப்படும். இதில், 4 லட்சம் மாணவர்கள் கலந்துகொள்வர். வரும் ஆக., 10, 11, 18 ஆகிய தேதிகளில் மொத்தம், 3 நாட்கள் ஹிந்தி பாடத்தின், பல்வேறு நிலைகளுக்கான தேர்வு நடக்க உள்ளது. இந்த தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு, ஹிந்தி தேர்வுக்கான ஒரு நாள் இலவச பயிற்சி முகாம், நாமக்கல் அடுத்த நல்லிபாளையம் கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. ஹிந்தி ஆசிரியர் செல்வராஜ் தலைமையில், 15 ஆசிரியர்கள் பயிற்சி அளித்தனர். நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, 120 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.