Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மோகனூர் போலீஸ் ஸ்டேஷனில் முதல் பெண் இன்ஸ்பெக்டர்

மோகனூர் போலீஸ் ஸ்டேஷனில் முதல் பெண் இன்ஸ்பெக்டர்

மோகனூர் போலீஸ் ஸ்டேஷனில் முதல் பெண் இன்ஸ்பெக்டர்

மோகனூர் போலீஸ் ஸ்டேஷனில் முதல் பெண் இன்ஸ்பெக்டர்

ADDED : ஜன 06, 2024 01:06 PM


Google News
மோகனுார்: -மோகனுார் போலீஸ் ஸ்டேஷன், 1926 ஜூன், 1ல் துவங்கியது. 1996ல், சேலம் மாவட்டத்தில் இருந்து, நாமக்கல் மாவட்டம் பிரிக்கப்பட்டதை அடுத்து, ப.வேலுார் சப் டிவிஷனில் இருந்து, நாமக்கல் சப் டிவிஷனுக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து, இதுவரை, 26 இன்ஸ்பெக்டர்கள், மோகனுார் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில், இங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் தங்கவேல், மகுடஞ்சாவடிக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து, 27வது இன்ஸ்பெக்டராக கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சவிதா, மோகனுாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் சவிதா, மோகனுார் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக நேற்று பொறுப்பேற்றார்.

அவருக்கு, எஸ்.ஐ.,க்கள், போலீசார் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றார். மோகனுார் போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்ற முதல் பெண் இன்ஸ்பெக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us