ADDED : மார் 11, 2025 07:06 AM
ராசிபுரம்: ராசிபுரத்தில் இருந்து வெண்ணந்துார் செல்லும் வழியில் அலவாய் மலை, சித்தர் மலைகள் உள்ளன. இப்பகுதியில் முருகன், சிவன் கோவில்கள் உள்ளன.
அதுமட்டுமின்றி, வனப்பகுதியில் காட்டுப்பன்றி, மயில், உடும்பு உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. 500 ஏக்கருக்கு மேல் வனப்பகுதியில் பெரிய மரங்களும் வளர்ந்துள்ளன. தற்போது, கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நேற்று மாலை, 6:00 மணியளவில் அலவாய்மலையில் இருந்து லேசாக புகை வந்தது. ராசிபுரம் வனத்துறையினர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மலையின் மேல் பகுதியில் காட்டு தீ பரவிஎரிந்து கொண்டிருந்தது. தீயணைப்பு துறையினர் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், இரவு, 9:00 மணிக்கு காட்டு தீ மலைப்பகுதி முழுவதும் பரவி, 100 ஏக்கர் பரப்பளவில் மரங்கள், செடிகள் எரிந்தன.