/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தில் நிதி உதவி: தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்புவள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தில் நிதி உதவி: தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு
வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தில் நிதி உதவி: தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு
வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தில் நிதி உதவி: தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு
வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தில் நிதி உதவி: தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு
ADDED : ஜன 04, 2024 11:38 AM
நாமக்கல்: 'கால்நடைகளுக்கு உதவ, வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தின் மூலம் நிதிஉதவி பெற, அரசு சாரா தொண்டு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
'வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்' திட்டத்தில், கால்நடைகளுக்கு உதவ, அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், விலங்குகள் நலனில் அக்கறையுள்ள அமைப்புகள், வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தின் மூலம், நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம். ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட காயமடைந்து தெருவில் சுற்றித்திரியும் கால்நடைகளுக்கு, உணவு மற்றும் மருத்துவ அறுவை சிகிச்சை அளிப்பதற்கும், காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு, அவசர சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காகவும், மருந்து, அவசர சிகிச்சை ஊர்தி கொள்முதல் செய்யவும் விண்ணப்பிக்கலாம்.
மேலும், ஆதரவற்ற, கைவிடப்பட்ட காயம் அடைந்து தெருவில் சுற்றித்திரியும் கால்நடைகளுக்கு, உறைவிடம் கட்டுவதற்கும், தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த, கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்த நிதி உதவிக்கோரி விண்ணப்பம் செய்யலாம்.
கால்நடை நலனில் அக்கறை கொண்டு அவற்றுக்கு உதவிடும் வகையில், உணவு வழங்குதல், சிகிச்சை அளித்தல், உணவு வசதி ஏற்படுத்தி நடத்தி வருதல், தடுப்பூசி போன்ற பணிகளை மேற்கொள்ள, அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் கால்நடைகள் நலனில் அக்கறை கொண்ட அமைப்புகள் நிதி உதவி பெற்றிட, இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தில் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.