அரசு பள்ளி அருகே முட்புதரால் அச்சம்
அரசு பள்ளி அருகே முட்புதரால் அச்சம்
அரசு பள்ளி அருகே முட்புதரால் அச்சம்
ADDED : ஜூன் 02, 2025 06:46 AM
எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் யூனியன், மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, முட்புதர் ஆக்கிரமித்துள்ளது. இதனால் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மண்ணாடிபாளையம், சாயக்காடு, கொன்னங்காடு, கூத்தம்பூண்டி, கூப்பிட்டாம்பாளையம், சாலையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இவ்வழியை கடந்து தான் செல்ல வேண்டும்.
முட்புதராக காணப்படுவதால், விஷ ஜந்துக்களால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, பள்ளி அருகே ஆக்கிரமிப்பு செய்துள்ள முட்புதர்களை அகற்ற, 100 நாள் பணியாளர்களை கொண்டு துாய்மை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.