Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/'இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை இரட்டிப்பு'

'இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை இரட்டிப்பு'

'இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை இரட்டிப்பு'

'இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை இரட்டிப்பு'

ADDED : ஜூலை 22, 2024 08:12 AM


Google News
நாமக்கல் ; 'விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு ஆக்கப்-படும் என, மத்திய அரசு கூறிய நிலையில், இந்-தியாவில் விவசாயிகளின் தற்கொலைகள் தான் இரட்டிப்பு ஆகியுள்ளது' என, உழவர் பெருந்த-லைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:பா.ஜ., அரசு, மூன்றாவது முறையாக இந்தி-யாவில் ஆட்சி பொறுப்பில் உள்ளது. கடந்த, பத்து ஆண்டுகளில், விவசாயிகளின் வருமானம், இரட்டிப்பு ஆக்கப்படும் என வாக்குறுதி அளித்தி-ருந்தனர். ஆனால், விவசாயிகள் தேசிய மய-மாக்கப்பட்ட வங்கியில் வாங்கிய பயிர் கடன் மற்றும் பண்ணை சார்ந்த அபிவிருத்தி கடன் ஆகியவற்றை திருப்பி செலுத்த முடியாமல், இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலைகள் தான் இரட்டிப்பு ஆகியுள்ளன.வரும், 23ல் தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்-கையில், விவசாயிகள் உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு உண்டான கட்டுப்படியான விலையை, உற்பத்தி செலவில் இருந்து, எம்.எஸ்.சாமிநாதன் பரிந்துரைப்படி, 50 சதவீதம் கூடுதலாக விலை நிர்ணயம் செய்து, இந்த நிதி-நிலை அறிக்கையில் அறிவிக்க வேண்டும்.தமிழகத்தில் உள்ள ஆறு, ஏரி, குளம், நீர்தேக்-கங்கள் மற்றும் அணைகளை புனரமைக்க, நீர் மேலாண்மை திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும். தனியார் ஆலைகள், மரவள்ளி கிழங்கு விவசாயிகளிடம் இருந்து விலை குறை-வாக கொடுத்து வாங்குகின்றன். தனியார் ஆதிக்-கத்தை கட்டுப்படுத்த, மத்திய அரசு பொதுத்துறை ஜவ்வரிசி ஆலையை, சேலத்தில் அமைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us