/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணை பள்ளி வகுப்புஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணை பள்ளி வகுப்பு
ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணை பள்ளி வகுப்பு
ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணை பள்ளி வகுப்பு
ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணை பள்ளி வகுப்பு
ADDED : ஜூலை 05, 2024 12:20 AM
மல்லசமுத்திரம் : மல்லசமுத்திரம் வட்டாரத்திற்குட்பட்ட, ராமாபுரம் கிராமத்தில் நேற்று வேளாண்மைத்துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்-டத்தின் கீழ், பயறுவகை பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணைப்பள்ளி வகுப்பு, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் யுவராஜ் தலைமையில் நடந்தது.அவர் பேசுகையில், பயறுவகை பயிர்களுக்கு பூ பூக்கும் தரு-ணத்தில், 15 நாட்கள் கழித்து இரண்டு சத டி.ஏ.பி., கரைசல் அல்-லது பயறு 1 ஏக்கருக்கு 2 கிலோ பூப்பருவத்தில் தெளித்தல், அதன் பயன்கள் பற்றி விளக்கம் அளித்தார்.அப்போது தேவராஜ் என்ற விவசாயி வயலில், பயிரிடப்பட்-டுள்ள பாசிப்பயரில் நேரடியாக பயறு ஒண்டர் மற்றும் டி.ஏ.பி., தெளிப்பு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
இயற்கை விவசாயி முத்துராமன் சிறப்பாளராக கலந்துகொண்டு, பூச்சி விரட்டி தயாரித்தல், பஞ்சகாவ்யம், அங்கக பண்ணையம், இயற்கை முறையில் சாகுபடி செய்தல், மண்புழு உரம் பயன்-பாடு, பூச்சி நோய் கட்டுப்பாடு முறைகள், இயற்கை வேளாண்மை மூலம் மண்வளத்தை மேம்படுத்துதல் போன்ற தனது அனுபவ தொழில்நுட்பங்களை பற்றி விளக்கமளித்தார். இந்நிகழ்ச்சியில் 25 விவசாயிகள் கலந்துகொண்டனர்.உதவி வேளாண்மை அலுவலர் வேல்முருகன் மற்றும் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.