ADDED : செப் 10, 2025 12:54 AM
நாமக்கல், சங்ககிரி கோட்டத்துக்குட்பட்ட, மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், நாளை நடக்கிறது என, தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், சங்ககிரி இயக்கமும் பராமரிப்பும் செயற்பொறியாளர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை: சங்ககிரி கோட்டத்தில் மாதாந்திர மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம், நாளை காலை, 11:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை சங்ககிரி செயற்பொறியாளர் அலுவலகத்தில், மேற்பார்வை பொறியாளர் முன்னிலையில் நடக்கிறது. எனவே, சங்ககிரி கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.